போராட்டம் நடத்த வந்த அதிமுக பிரமுகர் விபத்தில் பலி
தென்காசி: தென்காசியில் நடந்த அதிமுக போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த மானூர் ஒன்றிய அதிமுக கிளைச் செயலாளர் சேர்மன் கனி சாலை விபத்தில் உயிரிழந்தார். 6 பேர் படுகாயமடைந்தனர்.
தென்காசி ஜம்பு நதி நீர்த்தேக்கத் திட்டத்திற்கு கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் தற்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் இதை கிடப்பில் போட்டு விட்டதாக கூறி, அதைக் கண்டித்து இன்று தென்காசி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதையடுத்து நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான அதிமுகவினர் வேன்களில் தென்காசி வந்தனர். அதேபோல மானூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 20 அதிமுகவினர் மானூர் ஒன்றிய திமுக கிளைச் செயலாளர் சேர்மன் கனி தலைமையில் வந்தனர்.
அவர்களது வேன் பாவூர் சத்திரம் அருகே வந்தபோது, எதிரே தூத்துக்குடியை நோக்கிப் போன லாரி பயங்கரமாக மோதியது. இதில் சேர்மன் கனி சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களில் 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications