நாடாளுமன்ற தேர்தல்: தமிழக காங். எம்பிக்களுடன் சோனியா ஆலோசனை

நாடாளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல், கூட்டணிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சியின் நிலைமை குறித்து தலைவர்கள், எம்பிக்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரவுள்ளது.
இந் நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் எம்.பிக்களுடன் சோனியா அழைத்து ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன், மணிசங்கர் அய்யர்,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், ஞானதேசிகன் உள்ளிட்ட எம்பிக்கள் பங்கேற்றனர்.
அப்போது தமிழக நிலைமை குறி்த்து சோனியாவிடம் இவர்கள் விளக்கினர். திமுக கூட்டணிக்குள் பாமக வர வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டியதாகத் தெரிகிறது.
மேலும் திமுக, அதிமுக கூட்டணிகளின் வெற்றி வாய்ப்பு, காங்கிரஸ் போட்டியிட கோர வேண்டிய தொகுதிகள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மதுரை திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் குறித்தும் சோனியா கேட்டறிந்ததாகத் தெரிகிறது.
-
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள்! போட்ட கண்டிஷன் என்னாச்சு? காங்கிரஸுக்கு ஸ்ரீநிதி கேள்வி -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications