பாலியல் தொல்லை-தந்தை மீது மகள் புகார்
சென்னை: பெற்ற தந்தையே தன்னிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயல்வதாக அவரது மகள் சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம், பால்வாடி முதல் தெருவில் வசித்து வருபவர் ஜெயக்குமாரி. 25 வயதாகும் ஜெயக்குமாரி, சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில், எனது தந்தை பெயர் பன்னீர் செல்வம். எனது தாயார் 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனது சகோதரிக்கு செப்டம்பர் மாதம் திருமணமாகியது.
நான், எனது தந்தையுடன் தங்கியுள்ளேன். கடந்த 3 மாதங்களாக என்னிடம் எனது தந்தை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயல்கிறார்.
எனது தந்தை தினசரி குடித்து விட்டு வந்து குடிபோதையில் என்னிடம் தவறாக நடக்க முயல்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் எனது தந்தையிடமிருந்து தப்பிக்க வீட்டுக்கு வெளியே தெருவில் படுத்துத் தூங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.
அக்கம் பக்கம் வசிப்போரிடம் எனது நிலையைக் கூறி உதவுமாறு கேட்டுக் கொண்டும் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.
இதையடுத்து வேறு வழியில்லாமல் போலீஸை நாடியுள்ளேன். பெற்ற மகளிடமே இப்படி நடந்து கொள்ளும் எனது தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் ஜெயக்குமாரி கோரியிருந்தார்.
இந்தப் புகாரை பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்த ஆணையர் அலுவலகம், மனு மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பூந்தமல்லி போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
பெற்ற தந்தையே தன்னிடம் தவறாக நடப்பதாக மகள் புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications