ஒரிசா: சங் பரிவாரின் கிறிஸ்துமஸ் பந்த் வாபஸ்
புவனேஸ்வர்: கிறிஸ்துமஸ் தினத்தின்போது ஒரிசாவில் நடத்தப் போவதாக அறிவித்திருந்த பந்த்தை, சங் பரி்வார் அமைப்புகள் விலக்கிக் கொண்டுள்ளன.
முதல்வர் நவீன் பட்னாயக்கை, பாஜக தலைவர்களுடன் சேர்ந்து சுவாமி லட்சுமானந்த் சரஸ்வதி ஷ்ரத்தாஞ்சலி சமிதி அமைப்பின் நிர்வாகிகள் இணைந்து சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சுவாமி லட்சுமாணந்த் சரஸ்வதி சுவாமிகளைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்யக் கோரி கிறிஸ்துமஸ் தினத்தின்போது பந்த் நடத்த முன்னதாக சங் பரி்வார் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
இதனால் ஒரிசாவில் மீண்டும் வன்முறை மூளும் அபாயம் எழுந்தது. இதையடுத்து இந்தப் போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கோரி முதல்வர் நவீன் பட்னாயக், லட்சுமாணந்த் சமிதிக்கு கடிதம் எழுதினார்.
கொலையாளிகளைப் பிடிக்க அரசு உரிய நடவடிக்கைளை மேற்கொண்டிருப்பதாக அதில் அவர் சுட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பாஜக தலைவர்களுடன் இணைந்து சமிதி தலைவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து கொலையாளிகளை பிடிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த கோரினர். பின்னர் பந்த் அறிவிப்பை வாபஸ் பெற்றனர்.
இந்த அறிவிப்பை கிறிஸ்தவ அமைப்புகள் பல வரவேற்றுள்ளன.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications