விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் மூழ்கடிப்பு - இலங்கை
கொழும்பு: நடுக் கடலில் நடந்த சண்டையில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பலை மூழ்கடித்து விட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை முழுமையாக பிடிக்க இலங்கை ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியும். அதில் இன்னும் வெற்றி பெற முடியவில்லை. கடந்த சில நாட்களாக ராணுவ தரப்பில் பெருத்த உயிர் சேதமும் பின்னடைவும் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கிளிநொச்சியின் வடக்கு பகுதியில் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழிகள் மீது இலங்கை விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தின. விடுதலைப்புலிகளின் அரன்கள் தாக்கப்பட்டன.
இந்த நிலையில் முல்லைத்தீவு கடற்பகுதியில், வந்து கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பலை இலங்கை கடற்படை ரோந்து படகு வழிமறித்தது. அப்போது இரு தரப்பினருக்கும் கடும் பீரங்கி சண்டை நடந்தது. கடற்புலிகளின் கப்பல்கள் மீது ராணுவ ஹெலிகாப்டர்களும் குண்டு மழை பொழிந்தன.
இதில் விடுதலைப்புலிகளின் கப்பல் வெடித்து சிதறி தீப்பிளம்பாக மாறியது. அந்த கப்பல் முழ்கடிக்கப்பட்டதாக இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாயனகரா தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக மேலும் 4 படகுகளில் கடற்புலிகள் விரைந்தனர். அந்த 4 படகுகளும் முழ்கடிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த சண்டை நடந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
ஆனால் இது பற்றி விடுதலைப்புலிகளிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு தினம் ஆகியவற்றுக்காக விடுதலைப்புலிகளுடன் போர் நிறுத்தம் செய்யுமாறு கிறிஸ்தவ பிஷப்கள் இலங்கை அரசுக்கு கொரிக்கை விடுத்து இருந்தனர்.
ஆனால் இதை இலங்கை ராணுவம் நிராகரித்து விட்டது. விடுதலைப்புலிகள் ஆயுதங்களை போட்டு விட்டு சரண் அடையும் வரை போர் ஓயாது ராணுவ தாக்குதல் தொடரும் என்று ராணுவம் அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications