இடைத் தேர்தலில் ராதிகா போட்டியில்லை?
மதுரை: திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனது வேட்பாளரை நாளை அறிவிக்கிறது.
இது குறித்து கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமங்கலம் இடைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 12 பேர் கடிதம் கொடுத்துள்ளனர். வேட்பாளர் யார் என்பது பற்றி நாளை (21ம் தேதி) நெல்லையில் நடைபெறும் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார், அறிவிப்பார்.
புதிதாக எங்கள் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதால், சின்னம் ஒதுக்கிய பிறகு வரும் 26ம் தேதி முதல் தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் தொகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்வார்கள்.
பிரசாரம் மற்றும் உயர்மட்ட பணிக்குழுக்களுக்கு தனித்தனியே கமிட்டி அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
பெண் வாக்காளர்கள் அனைவருக்கும் ராதிகா மிகவும் அறிமுகமானவர். பெண்கள் ஆதரவு எங்களுக்கு அதிக அளவில் கிடைக்கும்.
திமுக, அதிமுக, தேமுதிக கட்சிகளைவிட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறும்.
நடிகர், நடிகைகளை பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து தலைவர்தான் முடிவு செய்வார் என்றார்.
இங்கு ராதிகா போட்டியிடுவாரா என்று கேட்டதற்கு, சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் ஆண் வேட்பாளராகத்தான் இருப்பார் என்று பதிலளித்தார். இதனால் ராதிகா போட்டியிட மாட்டார் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications