கஸாப் கைதா? பாகிஸ்தானுக்கு நேபாளம் கடும் கண்டனம்
காத்மாண்டு: மும்பையில் சிக்கியுள்ள தீவிரவாதி அஜ்மல் கஸாப், நேபாளத்தில் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கூறுவது அபத்தமானது, எங்களது நாட்டின் பெயரைக் கெடுக்கும் முயற்சி இது என்று நேபாள அரசு கூறியுள்ளது.
அஜ்மல் கஸாப் 2 ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்தில் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தானின் தி நியூஸ் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது.
வேலை தேடி கஸாப் நேபாளத்திற்குப் போனதாகவும், ஆனால் அவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி அவர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாகிஸ்தானியரை இந்திய உளவுப் பிரிவின் உதவியுடன் நேபாளப் படைகள் பிடித்ததாகவும் அந்த நாளிதழுக்கு பரூக்கி என்ற வக்கீல் பேட்டி அளித்திருந்தார்.
இந்த செய்திக்கு நேபாள வெளியுறவு அமைச்சகம் மறுப்பும், கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானின் தி நியூஸ் நாளிதழில் வெளியான இந்த செய்தி அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
அதில் லாகூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் கூறியிருந்ததைப் போல எந்த சம்பவமும் நேபாளத்தில் நடக்கவில்லை.
தி நியூஸ் இதழில் வெளியாகியுள்ள செய்தி கற்பனையானது, அடிப்படையற்றது, புனைசுருட்டாகும். நேபாளத்தின் பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நேபாள அரசு கடுமையாக மறுக்கிறது. அஜ்மல் கஸாப், நேபாளத்தில் கைது செய்யப்படவும் இல்லை. எந்த நாட்டிடமும் ஒப்படைக்கப்படவும் இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கஸாப் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது தொடர்பாக தான் நேபாள சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்திருந்ததாகவும், அது இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் பரூக்கி கூறியிருந்தார்.
இதை நேபாள நாட்டு சட்டத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். பரூக்கி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது உண்மைதான். ஆனால் கஸாப்பை விடுவிக்க கோரி அல்ல, வேறு இரு பாகிஸ்தானியர்கள் தொடர்பாகத்தான் அவர் வழக்குப் பதிவு செய்தார். ஆனால் தொடர்ந்து அவர் வழக்கை நடத்தாதால், அவரது மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது என சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications