அதிரடித் தாக்குதல் - 60 ராணுவத்தினர் பலி - 2 கி.மீ பகுதியை மீட்ட புலிகள்

இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முறிகண்டியில் உள்ள இரணைமடு பகுதியில் சனிக்கிழமை காலை 6.30 மணிக்குத் தொடங்கிய முற்பகல் 11.30 வரை வரை விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர்.
இதில் ராணுவத்தின் வசம் இருந்த 2 கிலோமீட்டர் தொலைவிலான தடுப்பரண் பகுதி மீட்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமைதான் இந்த பகுதியை ராணுவம் மீட்டிருந்தது. தற்போது அது மீண்டும் புலிகள் வசம் வந்துள்ளது.
விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலினால் படையினர் பலத்த இழப்புக்களை சந்தித்தனர். தங்களது வசம் இருந்த பகுதியை விட்டு விட்டு ஓடினர்.
இந்த கடும் சண்டையில் 60 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10 வீரர்களின் உடல்களைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். ஏராளமான ஆயுதங்களையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
ராணுவத்தினரின் தாக்குதலுக்கு உதவியாக விமானப்படையும் தாக்குதல் நடத்தியது. இருப்பினும் புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவம் ஓடி விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடந்த சண்டையின்போது விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட 38 ராணுவ வீரர்களின் உடல்களும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications