தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
சென்னை: தமிழகத்தில் இன்று 70 லட்சம் குழந்தைகளுக்கு முதல் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி சென்னையில் முகாமைத் தொடங்கி வைத்தார்.
ஆண்டுதோறும் ஒட்டுமொத்த போலியோ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இன்று தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்து 399 மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு முதல் தவணை சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு, குழந்தைக்கு சொட்டு மருந்து அளித்து தொடங்கி வைத்தார்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், கோயில்கள், சுற்றுலா மையங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டன. நடமாடும் சிறப்பு மையங்களும் செயல்பட்டன.
சென்னையில் 1126 மையங்கள் அமைக்கப்பட்டு ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.
மேயர் மா.சுப்பிரமணியன் ராயப்பேட்டை மாநகராட்சி நலவாழ்வு மையத்தில் குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, மன்ற உறுப்பினர் துரை மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கலெக்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போலியோ முகாம்களைத் தொடங்கி வைத்தனர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications