போலியா குறித்து புரளி-10 பேர் கைது
கோவை: போலியோ சொட்டு மருந்து கொடுத்ததால் குழந்தைகள் பலியானதாக வதந்தி பரப்பிய 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான உதயக்குமார் என்பவர் ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு நின்று கொண்டு இத்தகவலைப் பரப்பிக் கொண்டிருந்தார்.
அதேபோல ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த யோகனாதன் என்பவரும் வதந்தி இதுபோல வதந்தி பரப்பிக் கொண்டிருந்தார். இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இருவரும் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
கோவை காந்திபுரம் சாலையில் 3 பேர் நின்று கொண்டு அங்கு திறந்திருந்த கடைகளை அடைக்க சொல்லி தகராறு செய்தனர்.
போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதால் குழந்தைகள் இறந்து விட்டன. நீங்கள் கடைகளை அடைக்காமல் வியாபாரம் செய்து கொண்டு இருக் கிறீர்களாப என்று கூறி அவர்கள் தகராறு செய்தனர். பாரதியார் சாலையில் ஒரு கடையின் கண்ணாடியை உடைத்தனர்.
உடனே ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து சென்று போத்தனூரை சேர்ந்த சீனிவாசன் (28), பூபதி (28), குனியமுத்தூரை சேர்ந்த முகமது சாதிக்பாட்சா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
அதேபோன்று ராமநாதபுரம் பகுதியில் கடையை அடைக்க சொல்லி தகராறு செய்த ராமநாதபுரம் திருமால் வீதியை சேர்ந்த தலித் முருகன் (32), அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (31), ராமலிங்கம் ஜோதிநகரை சேர்ந்த கார்த்திக் (25) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
போலியோ சொட்டு மருந்து குறித்து மக்களிடம் பீதியை கிளப்பியதாகவும், கவுண்டம்பாளையம் நகராட்சி ஜீப் கண்ணாடியை உடைத்ததாகவும் ரவி (35) மற்றும் இடிகரையை சேர்நத வினோத் (23) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications