தங்கபாலு, இளங்கோவன் படங்களுக்கு செருப்பு மாலை-எரிப்பு: 17 பேர் கைது
ஈரோட்டு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் ஆகியோரை விடுவிக்கக் கோரி தஞ்சை செங்கிப்பட்டியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்சியின் தஞ்சை நகர செயலாளர் இராசு. முனியாண்டி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஈழத் தமிழாகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் தலைவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருவதாகக் கூறி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மற்றும் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் படங்களுக்கு செருப்பு மாலையிட்டு ஊர்வலமாகக் கொண்டு வந்து தீ வைத்து எரித்தனர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை முதலில் போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்த பின் காவல்துறையினர் தாங்கள் பதிவு செய்த புகைப்படங்களை வைத்து அதில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க செங்கிப்பட்டி கிராமம் முழுக்க தேடுதல் வேட்டை நடத்தினர். வீடு வீடாகப் புகுந்து 17 பேரை கைது செய்து கொண்டு சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications