யுஎஸ்ஸை வெறுக்கும் அரபு நாடுகள்-ரைஸ்
வாஷிங்டன்: அரபு உலகில், புஷ் நிர்வாகத்திற்கு எந்த செல்வாக்கும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க அரசுக்கு செல்வாக்கு இல்லை. மத்திய கிழக்கில் வசிக்கும் மக்கள் சுதந்திரமாக வசிக்க வேண்டும். சர்வாதிகாரப் பிடியிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்.
அரபு நாடுகளிடம் தற்போது அமெரிக்காவுக்கும், புஷ் நிர்வாகத்திற்கும் புகழ் இல்லை. இஸ்ரேலின் உரிமைகளைக் காக்க அமெரிக்கா உறுதியுடனும், தீவிரமுடனும் செயல்பட்டு வருவது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அதேசமயம், பாலஸ்தீனியர்கள் தங்களது மண்ணில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றும் அமெரிக்கா பாடுபட்டு வருவதை அவர்கள் மறந்து விடக் கூடாது.
சில அரபு நாடுகளில் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அளவில் எதிர்ப்பு காணப்படுகிறது. புஷ் அரசின் கொள்கைகள் சிலவற்றை அவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த உலகும் அமெரிக்காவுக்கு எதிராக இருப்பதாக கூறி விட முடியாது.
அமெரிக்கா மீதான அரபு உலகின் கோபம், புஷ் நிர்வாகத்தால் ஏற்பட்டதல்ல. புஷ் நிர்வாகத்தோடு இது முடிந்து விடக் கூடியதும் அல்ல.
இந்த நிலை படிப்படியாக மறையும், அரபு உலகிலும் அமெரிக்காவுக்கு நல்ல மரியாதை கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் ரைஸ்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications