மதுரை அரசு மருத்துவமனை கால்வாயில் மிதந்த 15 சிசுக்களின் பிணங்கள்
மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முன்புறம் உள்ள கால்வாயில் 15க்கும் மேற்பட்ட சிசுக்களின் இறந்த உடல்கள் மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை அரசு மருத்துவமனை முன்பாக மருத்துவ கல்லூரியின் மைதானத்தை ஒட்டி உள்ள கழிவு நீர் கால்வாயில் நேற்று காலை ஒரு ஆண் சிசுவின் உடல் மிதந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு கூடினர். இந்த நிலையி்ல் அந்த உடலுக்கு அருகிலேயே 3 மாதம் மாதம் முதல் 4 மாதங்களே ஆன, வளர்ச்சி அடைந்த 15க்கும் மேற்பட்ட சிசுக்களின் உடல்கள் சிதைந்த நிலையில் மிதந்ததைப் பார்த்த மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக போலீஸாருக்கும், மாநகராட்சி மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் பறந்தது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கும், மதிச்சியம் போலீசாருக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள், அந்த உடல்களை மீட்டு சாக்குப் பைகளில் கட்டி சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
இந்த சிசுக்கள் குறைப் பிரசவத்தில் பிறந்திருக்கும் அல்லது அபார்ஷன் செய்யும்போது பிறந்து இறந்தவையாக இருக்கலாம் என மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக பெரிய மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்களில் இறந்த சிசுக்களின் உடல்களை ரசாயன திரவத்தில் வைத்துப் பாதுகாப்பார்கள். சோதனைக்காக இவற்றைப் பதப்படுத்துவது வழக்கம். பின்னர் அவற்றை அழித்து விடுவார்கள்.
பின்னர் அவற்றை முறையாக அப்புறப்படுத்துவார்கள். ஆனால், அதை முறையாகச் செய்யாமல் கால்வாயில் வீசியிருப்பதாகத் தெரிகிறது.
மனதைப் பதற வைக்கும் வகையில் சிசுக்கள் கால்வாயில் கிடந்த விவகாரம் குறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் சிவக்குமார் கூறுகையில், அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் உடல் உறுப்புகள், கருச்சிதைவின் மூலம் பிறக்கும் குழந்தைகள், பிறக்கும் போதே எதிர்பாராத விதமாக இறந்து போகும் குழந்தைகளின் உடல்கள் உள்பட அனைத்து மனித கழிவுகளையும் அகற்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் குழந்தைகளின் உடல்கள் உள்பட அனைத்தையும் எடை போட்டு எடுத்து சென்று உயர் வெப்ப அழுத்தத்தில் அவற்றை அழித்து விடுவார்கள். இதற்கான முறையான ரசீதுகளையும் எங்களிடம் காட்டுவார்கள்.
எனவே அரசு மருத்துவமனையில் இருந்தோ, மருத்துவ கல்லூரியில் இருந்தோ இந்த சிசுக்களை கொண்டு சென்று கழிவுநீர் கால்வாயில் கொட்டியிருக்க வாய்ப்பே இல்லை. உரிய பாதுகாப்பை மீறி பதப்படுத்தப்பட்ட சிசுக்களின் உடல்களை எளிதில் வெளியே கொண்டு செல்ல முடியாது. எனவே ஏதாவது தனியார் மருத்துவமனையில் இருந்து அவற்றை கொண்டு வந்து கொட்டியிருக்கலாம் என்றார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications