கைதான டாக்டரின் லாக்கரில் ரூ. 66 லட்சம்
சென்னை: லஞ்சம் வாங்கி பிடிபட்ட சென்னை துறைமுக டாக்டரின் வங்கி லாக்கரை சோதனையிட்ட போலீஸார் அதில் ரூ. 66 லட்சம் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை துறைமுகத்தில் சுகாதார அதிகாரியாக வேலை பார்த்த டாக்டர் சாய்ராம் பாபு என்பவர் லஞ்ச ஊழல் புகாரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கோயம்பேட்டில் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் நடத்தி வருபவர் அலெக்சாண்டர். இவர் பல்வேறு நாடுகளிலிருந்து ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்கிறார்.
கப்பல் மூலம் இந்தப் பழங்கள் சென்னைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இவற்றை துறைமுகத்தில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரி சோதனையிட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு உரியவைதான் என்று சான்றிதழ் அளிக்க வேண்டும்.
இந்தப் பொறுப்பில் தான் டாக்டர் சாய்ராம் பாபு உள்ளார். கடந்த 19ம் தேதி வாஷிங்டனிலிருந்து ஆப்பிளை இறக்குமதி செய்துள்ளார் அலெக்சாண்டர். அவற்றுக்கு தரச் சான்றிதழ் வழங்குவதற்கு ரூ. 6000 லஞ்சம் கேட்டார் சாய்ராம். இதையடுத்து சிபிஐ லஞ்ச தடுப்புப் பிரிவில் புகார் கொடுத்தார் அலெக்சாண்டர்.
அதன் பேரில் சாய்ராமை சிபிஐ அதிகாரிகள் மடக்கினர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வீட்டை சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டபோது, மூன்று வங்கிகளில் லாக்கர் வைத்திருந்தது தெரியவந்தது.
அவரது வங்கி சேமிப்பு கணக்கில் ரூ.1 கோடியே 4 லட்சம் போடப்பட்டிருந்தது. ரூ.11 லட்சம் சேமிப்பு கணக்கு அவரது மனைவி ரமணி, மகன் கணேஷ், மகள் பிரியங்கா ஆகியோர் பெயரில் இருந்தன. கிஸான் விகாஸ் பத்திரமும் ரூ.4 லட்சத்துக்கு வாங்கப்பட்டது கண்டறியப்பட்டது.
ஜவுளிக்கடை பைகளில் கட்டுக்கட்டாக...:
இதையடுத்து மூன்று வங்கிகளின் லாக்கரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் திறந்து பார்த்தார்கள். லாக்கர்களில் ஜவுளி கடைகளில் துணி வாங்கும்போது தரும் பாலீதின் பைகளில் கட்டுகட்டாக ரொக்க பணம் இருந்தது.
இதைப் பார்த்து சிபிஐ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை கைகளால் எண்ண முடியாமல் பணம் எண்ணும் மெஷினை வைத்து எண்ணி முடித்தனர். மொத்தம் ரூ.66 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது.
சாய்ராமிடம் மொத்தம் ரூ.1 கோடியே 85 லட்சம் பணம் வங்கி சேமிப்பு கணக்கு மூலமும், ரொக்கமாகவும் கைப்பற்றப்பட்டதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இன்னொரு வங்கி லாக்கரையும் திறந்து பார்க்கவுள்ளனர். அதில் எத்தனை லட்சம் புதைந்து கிடக்கிறதோ தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications