லாகூர் குண்டுவெடிப்பில் இந்தியருக்கு தொடர்பு-கூறுகிறது பாக்
இஸ்லாமாபாத்: லாகூரில் நேற்று நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த சதீஷ் ஆனந்த் சுக்லா என்பவரைக் கைது செய்துள்ளதாகவும், அவர்தான் இந்த செயலைச் செய்ததாகவும் பாகிஸ்தான் புது குண்டைப் போட்டுள்ளது.
மும்பை தாக்குல் சம்பவம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது. இந்த நிலையில், புதிய தகவல் ஒன்றை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.
லாகூரில் நேற்று நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்தியர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் புதுக் கதை விட்டுள்ளது. அவர் இந்தியத் தூதரக அலுவலகத்தில் முன்பு வேலை பார்த்தவர் என்றும் அது கூறுகிறது.
லாகூரில் உள்ள அரசு அதிகாரிகள், நீதிபதிகளுக்கான குடியிருப்பு வளாகத்தில் நேற்று காலை 9.20 மணிக்கு கார் குண்டு ஒன்று வெடித்தது. இதில் ஒரு பெண் பலியானார். 4 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகத்தான் சுக்லாவைக் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது. அவர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் வேலை பார்த்தவர் என்றும், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்றும் பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது. சுக்லாவை பாகிஸ்தான் உளவுப் படையினர் கைது செய்துள்ளனராம்.
தான்தான் குண்டு வைத்ததாக சுக்லா ஒத்துக் கொண்டுள்ளதாகவும், 3 கூட்டாளிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications