தலிபான்களைத் தொடர்ந்து உலமாக்களும் பாக். ராணுவத்திற்கு ஆதரவு
இஸ்லாபாத்: இந்தியா போர் தொடுத்தால் நாங்களும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவாக இருப்போம் என பாகிஸ்தான் உலமாக்கள் சபை தலைவர் முப்தி முனிபூர் ரஹ்மான் கூறியுள்ளார்.
பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், பாகிஸ்தான் ராணுவத்திற்கு நாங்கள் ஆதரவு தருவோம். எங்களது ஆயிரக்கணக்கான வீரர்களை இந்தியாவுடன் போர் புரிய அனுப்புவோம் என தலிபான் தீவிரவாதிகள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது உலமாக்கள் சபையும், பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலமாக்கள் சபைத் தலைவர் முப்தி முனிபூர் ரஹ்மான் கூறுகையில், இந்தியா போர் தொடுத்தால் அதற்கு எந்தப் பலனும் இருக்காது. மாறாக, ரத்தக் களறியும், பேரழிவும்தான் அதற்குப் பரிசாக கிடைக்கும்.
இதை எடுத்துக் கூறி இந்தியாவை சர்வதேச சமுதாயமும், ஐ.நா. சபையும் அறிவுறுத்தி அமைதி காக்க கூற வேண்டும்.
தீவிரவாதத்தால் பாகிஸ்தானும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து உலமாக்களும் வருகிற நாட்களில் அரசுக்கும், ராணுவத்திற்கும் ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும் என்றார் அவர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications