முதல்வர்களுக்கு ப.சிதம்பரத்தின் 8 கட்டளைகள்-20 நாள் கெடு
டெல்லி: உள்நாட்டு பாதுகாப்பை உறுத் செய்ய 8 அம்ச நடவடிக்கைகளை அமல்படுத்துமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுதி உள்ளார்.
இந்த நடவடிக்கைகளை 20 நாட்களில் அமல்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டை வரும் 6ம் தேதி மத்திய அரசு கூட்டியுள்ளது.
இந் நிலையில் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநில முதல்வர்களுக்கு ப.சிதம்பரம் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இளம் மற்றும் துடிப்புமிக்க எஸ்பி அல்லது டிஎஸ்பி அந்தஸ்தில் 24 மணி நேரமும் இயங்கும் காவல்துறை சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட வேண்டும். அந்தக் கட்டுப்பாட்டு அறை மாநிலத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்பிக்கள் அலுவலகங்களில் இருந்து வரும் சட்டம்-ஒழுங்கு, வன்முறை, தீவிரவாதம் தொடர்புடைய தகவல்களை சேகரித்து ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்ள உதவ வேண்டும்.
மாநில புலனாய்வு அமைப்புகள் தமக்கென தனியாக ஒரு ஆய்வுப் பிரிவை உருவாக்கி, உளவுத் தகவல்களை பிற மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த தகவல்களை மத்திய உளவுத்துறைக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும்.
தினமும் காலையில் அந்தந்த மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை டிஜிபி, உளவுத்துறை இயக்குனர், தலைநகர் போலீஸ் ஆணையர்களுடன் முதல்வர்கள் உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்.
மாதம் 2 முறை அல்லது ஒரு முறையாவது கலெக்டர்கள், பிராந்திய ஐஜிக்கள், கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஆய்வுக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.
குண்டர்கள், கந்து வட்டிக்காரர்கள், கடத்தல்காரர்கள், நில பேர மோசடிப் பேர்வழிகள் உள்ளிட்டோரை அடியோடு ஒழிக்க தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் சட்ட விரோத செயல் தடுப்புச் சட்டங்களை மிகத் தீவிரமாக பயன்படுத்த வேண்டும்.
மாநிலத்தின் முக்கியப் பகுதிகள், அரசு மற்றும் வர்த்தக மையங்கள், நினைவுச் சின்னங்கள், முக்கிய தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கமாண்டோ படைகளை 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும்.
கமாண்டோ படையினருக்கு பயிற்சி அளிக்க மாநில அரசுகள் திட்டங்களை வகுத்து அதை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முக்கிய, பெரிய தனியார் நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சரான பின் முதல்வர்களுக்கு அவர் கடிதம் அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications