புத்தாண்டு: கோயில்கள் முன் மறியல்-இந்து முன்னணி
சென்னை: ஆங்கில புத்தாண்டையொண்டி நள்ளிரவில் கோயில்களை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, திறக்கப்படும் கோயில் கதவுகளை மூடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது.
அதன் மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஸ்தவர்களின் புத்தாண்டான ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது ஆகம விதிகளுக்கு மாறானது.
ஆங்கில புத்தாண்டுக்காக அர்த்த ராத்திரியில் கோவிலை திறக்கும் அறநிலையத்துறை நிர்வாகத்தை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
அன்றைய தினம் நடு ராத்திரியில் திறக்கப்படும் கோயில்களுக்கு எதிராக இந்து முன்னணி மறியல் போராட்டம் நடத்தி கோயில்களை இழுத்து மூடும்.
ஆகம விதிமுறைகளை மதிக்காத கோயில் அதிகாரிகள் மீது இந்து முன்னணி வழக்கு தொடுக்கும்.
தங்களது புத்தாண்டை அமைதியாக சர்ச்சுகளிலும், வீடுகளிலும் கொண்டாடும் கிருஸ்தவர்களுக்கு இந்து முன்னணி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும்.
அதற்கு மாறாக குடித்துவிட்டு கும்மாளம் போட்டு சாலையில் செல்லும் பெண்களின் கையை பிடித்து இழுத்து புத்தாண்டு வாழ்த்து சொல்லும் அராஜக கும்பலை இந்து முன்னணி தொண்டர்கள் தடுத்து நிறுத்தும் போராட்டமும் நடைபெறும்.
மானமுள்ள அடிமைத்தனத்தை கடைப்பிடிக்காத தமிழர்கள் தமிழர்களின் புத்தாண்டை மட்டும் கொண்டாட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.
ஆங்கில புத்தாண்டு தினத்தன்று தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications