இலங்கை தமிழர்களை காத்திடுக-கருணாநிதி உருக்கம்

இன்று நடந்த திமுக பொதுக் குழுவில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசை வலியுறுத்துவதற்கு ஏற்கனவே பிரதமர் அளித்த வாக்குறுதிபடி வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை விரைந்து அந்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதாகும்.
இதையடுத்து பொதுக் குழுவில் தன்னை கட்சியின் தலைவராக 10வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இலங்கையில் செத்துக்கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமான கடமை நமக்குள்ளது. இலங்கை தமிழர்கள் பச்சைக் குழந்தைகளோடு பரிதாபமான நிலையில் நடுத்தெருவிலே நின்று கொண்டிருக்கிறார்கள்.
அதற்காக வன்முறை வழியிலே, பலாத்கார வழியிலே, நாட்டுக்கு விரோதமான வழியிலே, தேசத்துக்கு பகையான வழியிலே செல்ல நாம் விரும்பவில்லை.
இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவு நாம் ஏற்றுக்கொள்ளும் முடிவாக இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு நாம் விரும்பும் அவசரத்துக்கு வேகமாக முடிவு செய்யாமல் இன்னும் இன்னும் இன்னும் தாமதம் செய்து வருவதால் அதன் ஒவ்வொரு நிமிடமும் அங்கே ஒரு தமிழனின் பிணம் விழுந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த பொதுக் குழுவின் சார்பிலே தெரிவித்துக் கொள்கிறேன்.
இது விஷயமாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முறையிட்ட போது அவர் எங்களுக்கு தந்த வாக்குறுதி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போர் நிறுத்தத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.
அந்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். அந்த வாக்குறுதியை வலியுறுத்தியே இங்கு தீர்மானம் போடப்பட்டுள்ளது. எனவே இந்த பொதுக்குழு தீர்மானத்துக்கு மதிப்பளித்து மத்திய அரசு அதனை நிறைவேற்றி தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறது. அந்த வரிசையில் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைக் களையும் சாதனையையும் செய்து முடிக்க வேண்டும்.
அங்கே தமிழர்கள் அன்றாடம் உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுத்து நிறுத்த குறுக்கு வழியில் மத்திய அரசை மிரட்ட நாம் விரும்பவில்லை. என்னுடைய நிலையை, திமுகவின் நிலையை, தமிழக மக்களின் நிலைப்பாட்டை சட்டமன்றத்திலே விளக்கியிருக்கிறேன்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் இளம் தலைவர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பிறகு; மறைவுக்கு முன்பு என்று இரண்டு பிரிவாக பார்க்க வேண்டுமென்று நான் கூறியிருக்கிறேன். இன்றைக்கு இலங்கையிலே தமிழர்கள் போர் காரணமாக இன்னமும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இதனால் தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்கள் மனதில் ரணம் ஏற்பட்டிருக்கிறது.
அவர்களுடைய ரணத்தை ஆற்ற வேண்டிய பொறுப்பு, அவர்களுடைய புண்ணுக்கு மருந்து போட வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என்று நான் உருக்கமான வேண்டுகோளை விடுக்கிறேன்.
இந்தக் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும். இதற்காக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மிக மிக பணிவாகவும், மிக மிக உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.
இதன் பிறகாவது மத்திய அரசு மனம் இறங்கி இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களில் இதனையே முக்கிய தீர்மானமாக கருதி மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கருணாநிதி.
மதுவிலக்கு தீர்மானம்:
முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீ்ர்மானங்களில் மது விலக்கு குறித்த தீர்மானமும் அடக்கம்.
அதன் விவரம்:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் அமைப்புகளின் பிரதிநிதிகள் அண்மையில் முதல்வரை சந்தித்து பேசியதை தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு இணங்க தமிழ்நாட்டில் படிப்படியாக முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
தீர்மானங்களை கட்சியின் புதிய பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாசிக்க, பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த கரவொலி ஆதரவுடன் அவை நிறைவேற்றப்பட்டன.
-
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்? இதுதான் காரணம் - எடப்பாடி சொன்ன சீக்ரெட்! -
பிராமண எதிர்ப்பு காலாவதியாகிவிட்டதா? - தவெக பொருளாளர் சொல்வது சரியா? -
Praveen: காங்கிரஸ் தலைமை அனுமதியுடனே விஜய்யை சந்தித்தேன்! வெடிகுண்டு வீசிய பிரவீன் சக்கரவர்த்தி! -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா! -
ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? நேரடியாக கேட்ட திமுக.. பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்! -
12 நாட்களே மிச்சம்! ராகுல் காந்தி தமிழகத்தை புறக்கணிக்க காரணம் இதுதானா? -
திமுக கொடுத்த சின்ன தோசை.. அப்செட்டில் ராகுல் காந்தி? பிரவீன் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் பேசறாரே -
திருமா பெயரை சொன்ன போது.. அப்படியே அமர்ந்திருந்த பிரேமலதா? உண்மையில் என்ன கோபம்? கசிந்த தகவல் -
பைசா செலவில்லை.. வெறும் ஏஐ வீடியோக்கள் - சொகுசாகப் பரப்புரை செய்யும் காங்கிரஸ் -
புதுமைப் பெண் திட்டம்! ரூ.1000 லிருந்து ரூ.1500 உயர்த்த திமுக வாக்குறுதி! இப்படி ஒரு சூப்பர் காரணம்?












Click it and Unblock the Notifications