இந்திய, பாக். ராணுவ அதிகாரிகள் ஹாட்லைன் மூலம் பேச்சு

இரு நாட்டு எல்லைப் பகுதியிலும் நிலவும் பாதுகாப்புப் படையினரின் நடமாட்டம் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின்போது பேசப்பட்டதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை பாகிஸ்தான் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் விவரங்களை அது தெரிவிக்கவில்லை.
மும்பைத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. பாகிஸ்தான் தனது எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்து வருகிறது. இந்தியாவும் பல்வேறு வழிகளில் தயார் நிலையில் இருந்து வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் போர் பதட்டம் காணப்படுகிறது.
இந்த நிலையில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் ஹாட் லைன் மூலம் பேசியிருப்பது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை நடந்த இந்த ஹாட்லைன் பேச்சு, இரு தரப்பு நிலைகளை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக நடந்ததாக பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தரப்புமே வழக்கமான பணிகளிலேயே ஈடுபட்டிருப்பதாகவும், படைக் குவிப்பு எதுவும் நடைபெறவில்லை என்பதையும் இந்த பேச்சின்போது இரு நாட்டு ராணுவமும் தெளிவுபடுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இரு நாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்களுக்கிடையே இந்த ஹாட்லைன் பேச்சு நடந்துள்ளது.
இந்த பேச்சால், இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் நிலவும் பதட்டம் தணியக் கூடும் என கூறப்படுகிறது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications