வாக்காளர்களுக்கு அதிமுக பணம்-சிடி ஆதாரத்துடன் திமுக புகார்

மதுரையி்ல் தங்கியுள்ள தேர்தல் பார்வையாளர் சுனில் குமார் குஜூரை, திமுக வேட்பாளர் லதா அதியமான், முன்னாள் எம்.பி சண்முக சுந்தரம், திருமங்கலம் தொகுதி திமுக தேர்தல் நிர்வாகிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழு சந்தித்துப் புகார் மனு கொடுத்தது.
அதில், அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்திற்கு ஆதரவு திருட்டுவதற்காக தொகுதிக்குள் தேர்தல் அதிகாரியின் அங்கீகாரம் பெறாத 100க்கும் மேற்பட்ட கார்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட வக்கீல்கள், ரவுடிகள் வந்துள்ளனர்.
தொகுதியில் தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்துள்ளனர். திமுக தொண்டர்களையும் மிரட்டியுள்ளனர்.
பச்சக்காவன்பட்டியில் அதிமுக வேட்பாளர் சார்பில் நெல்லையைச் சேர்ந்த வக்கீல் மணிகண்டன் மற்றும் 50க்கும் மேற்பட்டோர், வாக்காளர்களுக்கு ரூ. 7000 பணத்தை கொடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள அதிமுகவினர், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தும், ரவுடிகளை வைத்து அச்சறுத்தியும் வாக்கு சேகரிக்கும் வேலையில் இறங்கியுள்ளனர்.
இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. பின்னர் வக்கீல் சண்முக சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவினரும், அவர்களது அடியாட்களும் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்துள்ளனர். அவர்களை திருமங்கலம் பொதுமக்களும், திமுகவினரும் கையும் களவுமாகப் பிடித்து போலீஸீல் ஒப்படைத்துள்ளனர்.
சிந்துப்பட்டி, செக்கானூரணி, திருமங்கலம் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டது தொடர்பாக சிடி ஆதாரங்களையும் தேர்தல் பார்வையாளரிடம் கொடுத்துள்ளோம் என்றார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications