மைனர் பெண்ணுடன் உல்லசம்: கல்வித்துறை ஊழியர்கள் கைது-கற்பழிப்பு வழக்கு
சென்னை: விபச்சாரப் பெண்களுடன் ஜாலியாக இருந்த இரு கல்வித்துறை ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மைனர் பெண்ணிடம் உல்லாசமாக இருந்த ஊழியர் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள எம்பி இன்டர்நேஷனல்' என்ற லாட்ஜில் 2 இளம் பெண்களிடம் இருவர் உல்லாசமாக இருப்பதாக சென்னை சிபிசிஐடி விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு ரெய்டு நடத்த சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆனந்த பிரகாசம் தலைமையிலான தனிப்படை அங்கு விரைந்தது.
லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அறை ஒன்றில் 15 வயது மைனர் பெண் மற்றும் 19 வயது இளம்பெண் ஒருவரிடம் இருவர் உல்லாசமாக இருந்தனர். அவர்களை தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
பிடிபட்ட நபர்களில் ஒருவர் பெயர் சுகுமாரன். இவருக்கு வயது 50. இன்னொருவர் பெயர் ஜஸ்டர் ஆபிரகாம் (38).
இருவரும் உதவியாளர்கள்:
சுகுமாரன் சென்னை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக இருக்கிறார். ஜஸ்டர் ஆபிரகாம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இருக்கும் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றுகிறார்.
இருவரும் ரூ.5,000 பணம் கொடுத்து அந்தப் பெண்களிடம் உல்லாசமாக இருந்துள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டார்கள். பெண்கள் இருவரும் கோர்ட்டு அனுமதியுடன் அரசு பெண்கள் விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபசாரத்துக்கு அறை கொடுத்த லாட்ஜ் மானேஜர் சந்தோஷ்குமார், அழகிகளை சப்ளை செய்த, அதே பகுதியில் உள்ள இன்னொரு லாட்ஜின் ஊழியர் பெரியசாமியும் கைதானார்கள்.
வழக்கமாக இதுபோன்ற வழக்குகளில் ஆண்கள் கைது செய்யப்படுவதில்லை. பெண்கள் மட்டுமே கைது செய்யப்புடவார்கள். ஆனால் இந்த வழக்கில் இரு கல்வித்துறை ஊழியர்களையும் போலீஸார் கைது செய்து சிறையிலும் அடைத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.
அத்தோடு நில்லாமல், 15 வயது பெண், சிறுமி என்ற கணக்கில் (மைனர்) வருவார் என்பதால், அந்த சிறுமியிடம் உல்லாசம் அனுபவித்த சுகுமாரன் மீது கற்பழிப்பு வழக்கையும் போலீஸார் போட்டுள்ளனர்.
மேலும், இனிமேல் விபச்சாரப் பெண்களுடன் சிக்கும் ஆண்களும் கைது செய்யப்பட்டு சிறையி்ல் அடைக்கப்படுவார்கள் எனவும் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications