டோணிக்கு மீண்டும் மிரட்டல் கடிதம் - பாதுகாப்பு அதிகரிப்பு
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எம்.எஸ்.டோணிக்கு மீண்டும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதையடுத்து அவருக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள டோணியின் வீட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் ரூ. 50 லட்சம் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் அனைவரையும் குடும்பத்தோடு தீர்த்துக் கட்டி விடுவோம் என மிரட்டப்பட்டிருந்தது. தஸ்லீம் என்பவர் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்.
இந்த நபர் மும்பையில் உள்ள தாதா தாவூத் இப்ராகிமின் கும்பலைச் சேர்ந்தவர் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் டோணி குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இரு கடிதங்களையும் ஒரே நபர்தான் எழுதியிருப்பதாக தெரிகிறது. தாவூத் இப்ராகிம் கும்பலைச் சேர்ந்த அந்த நபர் யார் என்பதை அறியும் முயற்சியி்ல போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மிரட்டல்களைத் தொடர்ந்து டோணியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இசட் பிரிவு பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படுகிறது. இதையடுத்து அவருக்கு 45 பாதுகாவலர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பாக இருப்பார்கள்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications