புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் விபரீதம்: பாங்காக் கிளப்பில் தீ - 60 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Bangkok Night club
பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது இரவு விடுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.

நேற்றிரவு இந்த விபரீதம் நடந்தது. 200க்கும் மேற்பட்டோர் இந்த பயங்கர தீவிபத்தில் படுகாயமடைந்தனர்.

பாங்காக்கின் எக்கமாய் மாவட்டத்தி்ல உள்ள சந்திகா கிளப்பி்ல் நேற்று இரவு புத்தாண்டை வரவேற்கும் வகையில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதில் ஏற்பட்ட தீப்பொறி பற்றி தீப்பிடித்துக் கொண்டது.

இதையடுத்து அந்த இரண்டு மாடிக் கட்டட கிளப்பும் தீயில் சிக்கி கருகியது. பாதிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளிலும், தீயிலும் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். 212 பேர் படுகாயமடைந்தனர்.

30 பேரின் உடல்கள் அடையாளம் முடியாத அளவுக்கு கருகிப் போய் விட்டது. பான்டு வாத்தியக் குழுவினர் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகேதான் முதலில் தீப்பிடித்ததாக போலீஸ் அதிகாரி பிரவீத் கான்ட்வால் கூறியுள்ளார்.

தீவிபத்து நடந்த கிளப் அந்தப் பகுதியில் பிரபலமானது. உள்ளூர்க்காரர்கள் தவிர வெளிநாட்டினரும் பெருமளவில் அங்கு குழுமியிருந்தனர். இறந்தவர்களில் வெளிநாட்டினரும் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காயமடைந்தவர்கள் 14 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+