வேலை இழப்புகள் தற்காலிகமானதே-அலுவாலியா

நிருபர்களிடம் அலுவாலியா கூறியதாவது:
இந்தியாவின் பல துறைகளும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பது உண்மைதான். இதுவரை மொத்தம் ரூ.40,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, இந்த பொருளாதார நெருக்கடியால். இதை ஈடுகட்ட ரிசர்வ் வங்கியும் ரூ.20,000 கோடியை ரிலீஸ் செய்துள்ளது, ரொக்க இருப்பு விகித்த்தை மேலும் 50 புள்ளிகள் குறைத்துள்ளதன் மூலம்.
இனி தற்காலிகமாக பணவீக்கம் தொடர்பான நடவடிக்கைகளிலிருந்து கவனத்தைத் திருப்பப் போகிறோம். வளர்ச்சிப் பணிகளில் அதிக அக்கறை காட்டுவது இப்போது அவசியமாகிவிட்டது.
அக்டோபர் தொடங்கி டிசம்பர் இறுதி வரை ரிசர்வ் வங்கி 'ரிலீஸ்' செய்துள்ள தொகை ரூ.3,20,000 கோடி.
நாட்டின் பொருளாதார பின்னடைவைச் சமாளிக்க இன்னும் பல நடவடிக்கைகளை அரசு அடுத்தடுத்து அறிவிக்க உள்ளது. வங்கி வட்டி மட்டும் ரெபோ ரேட்டை மேலும் 100 புள்ளிகள் அடிப்படையில் குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதற்குக் காரணம், அதிக பணப் புழக்கத்தை ஏற்படுத்துவது தான்.
இந்த ஆண்டு முழுவதும் நிறைய வேலை இழப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். ஆனாலும் அவை தற்காலிகமானதே. விரைவில் ஒட்டுமொத்த அமைப்பும் சீரடையும் என்ற நம்பிக்கை உள்ளது , என்றார் அலுவாலியா.
நெடுஞ்தசாலைத் துறைப் பணிகளுக்காக விரைவில் மத்திய அரசு ரூ.25,000 கோடியை ஒதுக்கவுள்ளதாம். இதன்மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் வரி விலக்கு பெற்ற பத்திரங்களை விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது ரிசர்வ் வங்கி. இதன் மூலம் ரூ.75,000 கோடி திரட்டப்பட்டு வளர்ச்சிப் பணிகளுக்கு வழங்கப்படும்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications