எல்டிடிஇக்கு இலங்கையில் மீண்டும் தடை?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தற்காலிகமாக மீண்டும் தடை கொண்டுவர இலங்கை அரசு தீவிர திட்டம்ட்டு வருவதாக கொழும்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவத்துடன் கடுமையாக போரிட்டு வந்தாலும் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் இப்போது தடைகள் நீங்கிய இயக்கமாகவே உள்ளது.

இப்போது கிளிநொச்சிக்குள் ராணுவம் நுழைந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது. அதற்கான நடவடிக்கைகளை அதிபர் ராஜபக்சே தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தடை பயங்கரவாத தடுப்பு சட்ட விதிகளின் கீழ் கொண்டு வருவதா அல்லது அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் கொண்டு வருவதா என்பது தொடர்பாக அரச அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக இலங்கை ஊடகங்கள் கூறியுள்ளன.

இலங்கை அரசு 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் நாள் விடுதலைப் புலிகளை தடை செய்திருந்தது.

எனினும், 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு இந்தியாவில் தொடர்ந்து 17 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் அமைப்பு மீது தடை நீடித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+