திருமங்கலம் தேர்தல் கலவரம் - 7 திமுகவினர் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருமங்கலம் தொகுதியில் திமுக, அதிமுக இடையே ஏற்பட்ட வன்முறை தொடர்பாக திமுகவைச் சேர்ந்த 7 பேரை நேற்று இரவு போலீஸார் கைது செய்தனர்.

டிசம்பர் 28ந் தேதி திருமங்கலத்தில் பல இடங்களில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டு அதிமுகவினரையும், அவர்களது வாகனங்களையும் தாக்கியதாகப் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அதிமுகவினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமியைத் தாக்கிய வழக்கில் திமுகவைச் சேர்ந்த நல்லதம்பி, மயில்வாகனன் மற்றும் மதுரை மாநகராட்சி முன்னாள் உறுப்பினர் குருசாமி உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இருப்பினும் அதிமுகவினரைப் பார்த்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாக கூறப்படும் முன்னாள் மதுரை துணை மேயர் மிசா பாண்டியன் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+