தீவிரவாதிகளை ஒப்படைக்க முடியாது - பாக். பிடிவாதம்
இஸ்லாமாபாத்: இந்தியா கோரும் தீவிரவாதிகளை ஒப்படைக்க முடியாது என மறுபடியும் பாகிஸ்தான் பிடிவாதமாக கூறியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி முல்தான் நகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு நாடுகளுக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் இல்லை. அப்படி இருக்கையில்,இந்தியா, அமெரிக்கா கூறுவது போல யாரையும், இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது.
அமெரிக்காவுடன் எங்களுக்கு இதுபோன்ற ஒப்பந்தம் இல்லை. ஆனால் இந்தியாவுடன் இல்லை.
மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியாவிடமிருந்து அதிகாரப்பூர்வமாக ஏதாவது கோரிக்கை வந்தால் அதுகுறித்து உரிய முறையில் பதிலளிப்போம். ஆனால் இதுவரை மும்பை சம்பவம் தொடர்பாக இந்தியா எந்தத் தகவலையும், ஆதாரத்தையும் பாகிஸ்தானிடம் வழங்கவில்லை.
நாளை அமெரிக்க துணை அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சர் இஸ்லாமாபாத் வருகிறார். அவரிடம் இதை தெரிவிப்போம்.
மும்பை சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டம், நண்பர்கள் மற்றும் சில முக்கிய நாடுகளின் தலையீடு மற்றும் சமரசத்தால், தணிந்துள்ளது என்றார் குரேஷி.












Click it and Unblock the Notifications