பாக். கைவிட்டதை அறியாத அஜ்மல் கஸாப்

மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டு சிக்கியுள்ள கஸாப் தற்போது மும்பையில் பலத்த பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளான்.
கைதானதைத் தொடர்ந்து சட்ட உதவி கோரி அவன் பாகிஸ்தான் அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தான். இந்தக் கடிதம் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இதை பாகிஸ்தான் அரசு நிராகரித்து விட்டது. முதலில் கஸாப் பாகிஸ்தானிதான் என்பதை இந்தியா நிரூபிக்க வேண்டும். பிறகுதான் அவனது கோரிக்கை குறித்து பரிசீலிக்க முடியும் என பாகிஸ்தான் கூறி விட்டது.
ஆனால் இது எதுவுமே கஸாப்புக்குத் தெரியாது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சட்ட உதவி கோரி தான் எழுதிய கடிதம் குறித்து அவ்வப்போது கேட்கிறான் கஸாப். கடிதம் பரிசீலனையில் இருப்பதாக அவனிடம் கூறி வைத்துள்ளோம்.
பாகிஸ்தானில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து அவனுக்குத் தெரியாது. தனது கடிதத்தை பாகிஸ்தான் அரசு நிராகரித்தது குறித்தோ, தான் பாகிஸ்தானியே அல்ல என்று பாகிஸ்தான் கூறி வருவதோ கஸாப்புக்குத் தெரியாது.
பொருத்தமான நேரத்தில் நடந்ததை அவனிடம் தெரிவிப்போம். இது எங்களது விசாரணை உத்திகளில் ஒன்று என்றார்.
இதற்கிடையே தான் செய்தது குறித்து கஸாப் சற்றும் கவலைப்படவில்லை என்று ஆர்தர் சாலை சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அடையாள அணிவகுப்புக்காக கஸாப் அங்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
அப்போது அவனது முகத்தில் எந்தவித பதட்டமும் இல்லை. தான் செய்தது சரி என்று அவன் கூறுகிறான். தனது செயலுக்காக அவன் வருத்தமே படவில்லை என்றார் அவர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications