6 பேர் சாவுக்குக் காரணமான 2 கந்து வட்டிக் கொடூரர்கள் கைது
நெல்லை: நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக தற்கொலை செய்து கொள்ளக் காரணமாக இருந்ததற்காக கந்து வட்டி வசூலித்த ஒரு வக்கீல் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 12 பேரைக் கைது செய்யவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை சிவன் கோவில் பிராமணர் தெருவை சேர்நதவர் கோபால் ஆசாரி. நகை தொழில் செய்து வந்த இவர் கடன் நெருக்கடியால் கடந்த 3ம் தேதி தனது குடும்பத்தினர் 6 பேருடன் தற்கொலை செய்து கொண்டார்.
120 வட்டிக்கு கந்து வட்டி வசூலித்ததால்தான் கோபால் ஆசாரியின் குடும்பம் இந்த நிலைக்கு ஆளானது. மேலும், வக்கீல் ரவி என்பவர், கொடுத்த கடனுக்கு கந்து வட்டி கொடுக்க முடியாததால் ஆசாரியின் கவரிங் நகை தயாரிப்புக் கூடத்தை மூடி சாவியையக் கொண்டு சென்று விட்டாராம்.
இதனால் தொழிலை நடத்த முடியாமல் போனதால் அவமானத்திலும், சோகத்திலும், கோபால ஆசாரியின் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கோபால் ஆசாரிக்கு கடன் நெருக்கடி கொடுத்த பாளையங்கோட்டை கடிகார ஆசாரி தெருவை சேர்நத வக்கீல் ரவி, டவுண் மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த செல்லையா ஆசாரி மகன் குமார் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து உதவி கமிஷனர் கூறுகையில், கோபால் ஆசாரி தற்கொலை வழக்கில் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வக்கீல் ரவி, பைனான்சியர் குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விரைவில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள். கைதான வக்கீல் ரவி, குமார் இருவர் மீதும் கந்து வட்டி தடுப்பு சட்டம், 4ம் பிரிவின் கீழும், இந்திய தண்டனை சட்டம் 306ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து கடன் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications