ஏர் இந்தியா: குண்டான ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்!!

Subscribe to Oneindia Tamil

Air Hostesses
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் குண்டாகிவிட்ட தனது 10 விமான பணிப்பெண்களை (ஹோஸ்டஸ்களை) அதிரடியாக நீக்கிவிட்டது.

பொதுவாக தனியார் ஏர் ஹோஸ்டஸ்கள் சின்ன வயது பெண்களாக இருப்பார்கள். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இவர்கள், எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படுவார்கள்.

ஆனால் அரசு விமானப் போக்குவரத்தான ஏர் இந்தியா பணிப்பெண்கள் அரசு ஊழியர்கள். வயதானாலும் பணியில் இருப்பார்கள். ஒரேயடியாக குண்டாகிவிடாமல் இருந்தால் போதும். இவர்களுக்கு வயதுக்கேற்ப எடை அளவையும் வரையறுத்துள்ளது ஏர் இந்தியா.

18 வயதுடைய ஒரு பணிப்பெண் 152 செமீ உயரமும் 50 கிலோ எடையும் இருக்க வேண்டும். 26 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்கள் 152 செமீ உயரமும் 56 கிலோஎடையும்தான் அஇருக்க வேண்டுமாம்.

ஆனால் இதையும் மீறி ஓவர் வெயிட் போட்டு விட்ட 10 பணிப்பெண்களை ஏர் இந்தியா இப்போது பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நீக்கத்தை அந்தப் பெண்கள் முதலில் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாத நிர்வாகம் பணிநீக்க உத்தரவை வழங்கிவிட்டது.

இந்த 10 ஊழியர்களின் விவரங்களை இப்போதைக்கு வெளியிட மறுத்துவிட்ட ஏர் இந்தியா நிர்வாகம், அவர்களுக்கு வேலை நீக்க உத்தரவை இந்த வாரம் வழங்கியதை மட்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+