மீண்டும் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம்: பா.நடேசன்
வன்னி: கிளிநொச்சி வீழ்ச்சி தற்காலிகமானதே. மீண்டும் எங்களிடமே கிளிநொச்சி வந்து சேரும் என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புலிகள் ஆதரவு தமிழ்நெட் இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கிளிநொச்சியில்தான் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தோல்விகளைத் தழுவியுள்ளது இலங்கை ராணுவம்.
எனவே மீண்டும் கிளிநொச்சி எங்களிடமே வந்து சேரும். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
உலக நாடுகளின் ஆயுத பலத்தோடு இலங்கை ராணுவம் எங்களுடன் மோதி வருகிறது. ஆனால் மக்களின் ஆதரவுடன் மட்டும் நாங்கள் போராடி வருகிறோம். எனவே இந்தப் போரில் எங்களுக்கே இறுதி வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு பலமாக உள்ளது.
ஈழத்தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்ல. அவர்களுக்கு துன்பம் ஏற்படும் போது 7 கோடி தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து குரல் கொடுப்பார்கள்.
கிளிநொச்சியை ராணுவம் பிடித்துள்ளதை விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாக நாங்கள் பார்க்கவில்லை. போரில் இழப்புகளை குறைப்பதற்காக பின் வாங்கி செல்வது என்பது ஒரு தந்திரம்.
தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்கவே இலங்கை அரசு நினைக்கிறது.
கிளிநொச்சியில் உள்ள மக்கள் இப்போது வன்னி பகுதியில் பாதுகாப்பான இடத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இழந்த பகுதிகளை விடுதலைப் புலிகள் மீண்டும் கைப்பற்று வார்கள்.
இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவிக ளை நிறுத்தி எங்கள் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். உலக தமிழினம் ஒன்றுபட்டு எங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
தமிழ் மக்களிடமிருந்து எங்களை அன்னியப்படுத்தி விடலாம் என இலங்கை அரசு நினைக்கிறது. ஆனால் இது வெற்றி பெறாது. ஊடுறுவல் படையின் ஏஜென்டுகள் மற்றும் பொம்மை மனிதர்களின் முயற்சிகள் பலிக்காது.
இலங்கை ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை மட்டுமல்லாது சிங்கள மக்களையும் கூட நாங்கள் காத்துள்ளோம். சிங்கள மக்களுக்காவும்தான் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications