பிரதமருக்கு கருப்பு கொடி-பழ.நெடுமாறன் உள்பட 500 பேர் கைது
சென்னை: ஈழத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தும் தாக்குதலை மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தடையை மீறி கருப்புக் கொடி காட்ட முயன்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட 500க்கும் மேற்ப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனா.
சென்னையில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை 8 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு வந்தபோது அவருக்கு கருப்புக் கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500க்கும் மெற்ப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக இந்த மாநாட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்ததால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டது.
இந் நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை, பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, தேனிசை செல்லப்பா, திரைப்பட இயக்குனர் புகழேந்தி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் சைதாப்பேட்டை காவல் நிலையம் பின்புறமுள்ள பத்மாவதி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
தேசிய கொடி எரிப்பு-மாஜி அரசு ஊழியர் கைது:
இதற்கிடையே இலங்கைத் தமிழர்களைக் காக்க கோரி தேசியக் கொடியை எரித்து போராட்டம் நடத்திய முன்னாள் அரசு ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல பிரதமர் மன்மோகன் சிங்கின் கொடும்பாவியை எரித்ததாக 25 பேர் கைதானார்கள்.
சென்னை அண்ணா சாலை, அண்ணா சிலை அருகே நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்.
இலங்கை தமிழர்களை காப்பாற்றாத மன்மோகன் சிங்கே திரும்பி போ என்று அவர் கோஷங்கள் எழுப்பினார். இதைப் பார்த்த போக்குவரத்துப் போலீஸார் அந்த நபரைப் பிடிக்க ஓடினர்.
அதற்குள், அந்த நபர், கையில் சுருட்டி வைத்திருந்த தேசியக் கொடியை தீ வைத்து கொளுத்தினார். தேசிய கொடி எரிய தொடங்கியது.
அதிர்ச்சி அடைந்த போலீஸார் மின்னல் வேகத்தில் கொடியைப் பறித்து அதில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
கொடியைத் கொளுத்திய அந்த விஷம நபரைக் கைது செய்தனர். திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில், அவரது பெயர் பெயர் நாத்திக கேசவன் (60), சர்மா நகரை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. அரசு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து கட்டாய ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி செல்லம்மாள் மின்வாரியத்தில் பணியாற்றுகிறார்.
இலங்கை தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசும், பிரதமர் மன்மோகன்சிங்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், இந்த பிரச்சினையை மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்லவும், தேசிய கொடியை எரித்ததாக கைதான கேசவன் கூறியுள்ளார்.
இதையடுத்து நாத்திக கேசவன் மீது தேசியக் கொடி அவமதிப்பு தடுப்பு சட்டத்தின் 2(1)வது பிரிவின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்திய பின்னர் சிறையிலும் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, சென்னை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் அலுவலகம் அருகே நேற்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த ஏராளமான பேர் திடீரென்று பிரதமர் மன்மோகன் சிங்கின் கொடும்பாவியை கொளுத்தினார்கள்.
உடனே போலீசார் விரைந்து வந்து கொடும்பாவியை பறித்து அணைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications