இஸ்ரேல் Vs ஹமாஸ்- நுழைகிறது ஹிஸ்புல்லா?!

லெபனானில் இரு ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே நடந்த மோதலில் இஸ்ரேலுக்கு பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. ஈரானின் ஆதரவோடு இஸ்ரேலை எதிர்கொண்டது ஹிஸ்புல்லா.
இந் நிலையில் இப்போது காஸா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளை தாக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொன்று குவித்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் ஏ.கே.-47 துப்பாக்கிகளாலும் பழங்கால ராக்கெட்டுகளையும் கொண்டு தாக்க பதிலுக்கு போர் விமானங்களையும் டாங்கிகளையும் கொண்டு காஸா பகுதியில் தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்து வருகிறது இஸ்ரேல். கடந்த 10 நாட்களில் 700 பாலத்தீனர்களைக் கொன்றுள்ளது இஸ்ரேல். இஸ்ரேலின் தாக்குதலுக்கு பள்ளிகள், மருத்துவமனைகளும் தப்பவில்லை. இங்கு தான் அதிக உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இஸ்ரேலின் தீவிர ஆதரவு நாடான அமெரிக்கா வழக்கம் போல் இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருகிறது. அதே நேரத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் குறிப்பாக ஜெர்மனி, இஸ்ரேலின் செயலை கண்டித்து வருகின்றன.
செளதி தலைமையிலான அரபு நாடுகள் இஸ்ரேலை கட்டுப்படுத்துமாறு அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளை கெஞ்சிக் கொண்டுள்ளன.
இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை வழக்கம்போல் அரபு நாடுகள்- அமெரிக்கா, பிரான்ஸ் கூட்டணி ஆகியவை இடையே பிரிந்து நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.
இந் நிலையில் காஸாவில் அப்பாவிகள் மீதான இந்தத் தாக்குதலையடுத்து இஸ்ரேலுக்கு வட பகுதியிலிருந்து பதிலடி கொடுக்க ஹிஸ்புல்லா அமைப்பினர் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு ஈரானின் முழு ஆதரவு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மோதலில் ஹிஸ்புல்லாவும் இறங்கினால் விவகாரம் இஸ்ரேல்-பாலஸ்தீனம்-லெபனான் என்ற அளவோடு நிற்காமல் துருக்கி, ஜோர்டன், எகிப்து, ஈரான் வரை பரவும் என்ற பரவலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே சமரசத்துக்கு முயன்று வருகிறார். இரு தரப்பினரையும் இன்று கெய்ரோவுக்கு அழைத்துள்ளார். இந்தப் பேச்சுவார்ததையில் பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத் அப்பாசும் பங்கேற்கிறார்.
காஸா பகுதியில் மின்சாரம், குடிநீர் சப்ளையை துண்டித்துவிட்டு இந்தத் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது இஸ்ரேல். எகிப்து எல்லையில் உள்ள ஒரே செக்போஸ்ட் வழியாகத் தான் உணவும், மருந்துகளும் காஸாவுக்குள் வந்து கொண்டுள்ளன.
வெளிநாட்டு டிவி குழுவையும் காஸாவுக்குள் இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. தனது ராணுவப் படைகளுடன் சேர்ந்து தான் போக வேண்டும் என்ற நிபந்தனையோடு சில டிவி குழுவினரை மட்டும் அனுமதித்துள்ளது.
இந் நிலையில் இந்த மோதல் குறித்து விவாதிக்க ஈரான் நாடாளுமன்றத் தலைவர் அலி லரிஜானி சிரியா சென்றுள்ளார். அந் நாட்டு அதிபர் அல் அஸாத்துடன் அவர் விரிவான ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே அப்பாவி பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருவதைக் கண்டித்து இஸ்ரேல் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளார் வெனுசுவேலா அதிபர் ஹூகோ சாவேஸ். கம்யூனிஸ தலைவரான இவர் தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாவேஸ் கூறுகையில், வெனிசுலாவில் உள்ள யூதர்கள் இனியாவது இஸ்ரேல் அரசுக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications