கொழும்பு: சன்டே லீடர் ஆசிரியர் சுட்டுக் கொலை
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாயா ராஜபக்சேவின் ஊழல் குறித்து பகிரங்கப்படுத்திய சன்டே லீடர் இதழின் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கா கொழும்பில் நேற்று பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அடையாளம் தெரியாத இரு நபர்கள், லசந்தாவை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். படுகாயமடைந்த லசந்தா மருத்துவமனையில் பலியானார்.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே சன்டே லீடர் இதழுக்கும், அதன் ஆசிரியரான லசந்தாவுக்கும் கடும் மிரட்டல்கள் விருந்து வந்தன. அரசு தரப்பு ஊழல்களை சன்டே லீடர் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது. குறிப்பாக கோத்தபாய ராஜபக்சேவின் ஆயுத பேர ஊழல்களையும் லசந்தா பகிரங்கமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து லசந்தாவை அதிபர் ராஜபக்சே, பயங்கரவாத பத்திரிக்கையாளர் என கடுமையாக விமர்சித்தார். கோத்தபாய ராஜபக்சே, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த பின்னணியில்தான் நேற்று லசந்தா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
லசந்தாவின் படுகொலையால் இலங்கை மீடியா வட்டாரம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. தங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு தினம் முதல்தான் இலங்கை ஊடகவியல் துறையை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டார் அதிபர் ராஜபக்சே என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்றுதான் தமிழருக்குச் சொந்தமான மகாராஜா டெலிவிஷன் நெட்வொர்க் நிறுவனத்தை ஒரு கும்பல் அடித்துச் சூறையாடியது என்பது நினைவிருக்கலாம்.
இந்த டிவி நிலையத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் லசந்தா விக்கிரமதுங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications