கருணாநிதிக்கு தெரியுமா தெரியாதா?- ஜெயலலிதா
சென்னை: தான் சொன்னால் கேட்கக் கூடிய மத்திய அரசு தான் தற்போது ஆட்சி செய்கிறது என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதிக்கு லாரிகள் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் நிலவும் பிரச்சனை தெரியுமா, தெரியாதா என்ற அளவிற்கு குடும்பப் பிரச்சனைகளில் மூழ்கியிருக்கிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் அளவுக்கு குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடைய கோரிக்கையில் உள்ள நியாயத்தை மத்திய அரசு உணர்ந்து, அதை நிறைவேற்றி இருந்தால், இன்று இந்தியாவே ஸ்தம்பிக்கும் அளவுக்குப் போராட்டமும் வெடித்து இருக்காது; அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் இந்த அளவுக்கு உயர்ந்திருக்காது.
இதனால் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியுமா என்ற கேள்விக்குறியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டும் இது குறித்து மத்திய அரசு கவலைப்படாமல் இருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.
தான் சொன்னால் கேட்கக் கூடிய மத்திய அரசு தான் தற்போது ஆட்சி செய்கிறது என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழகத்தில் நிலவும் பிரச்சனை தெரியுமா, தெரியாதா என்கிற அளவிற்கு குடும்பப் பிரச்சனையில் மூழ்கி இருக்கிறார்.
தற்போது நிலவும் அசாதாரணமான நெருக்கடி நிலையை உடனடியாகப் போக்கும் வகையில், லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றி, பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில் இயல்பு நிலை மீண்டும் திரும்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications