அரசு ஜீப்பில் பெண்ணுடன் அதிகாரி 'ஜல்சா'!
நெல்லை: அரசு ஜீப்பில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த மத்திய அரசு அதிகாரி போலீஸ் ரெய்டில் சிக்கினார். அவரை போலீஸார் எச்சரித்து அனுப்பி விட்டனர்.
தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். டவுன் நயினார்குளம் அருகே செலலும்போது குளத்தின் கரையோரமாக மத்திய அரசுக்கு சொந்தமான ஜீப் ஒன்று நின்றது.
சந்தேகமடைந்த போலீஸார், ஜீப்பை நெருங்கிப் பார்த்தபோது, உள்ளே ஒருவர் பெண்ணுடன் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை வெளியே அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் மத்திய அரசு அதிகாரி என்பது தெரிய வந்தது.
மத்திய அரசின் நீர்வள ஆதார மேலாண்மை துறையில் அவர் பணியாற்றுகிறார். நெல்லை மாவட்டத்தில் நீர்வள ஆதாரம் குறித்து ஆய்வு செய்தவற்காக வந்த அவர் ஜங்ஷனில் உள்ள ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.
அவரை கடுமையாக எச்சரித்த போலீஸார் அவரையும், அந்தப் பெண்ணையும் அனுப்பி விட்டனர்.












Click it and Unblock the Notifications