நெல்லை-ரவுடி உள்பட 3 பேர் வெட்டிக் கொலை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை அருகே பிரபல ரவுடி உள்ளிட்ட 3 பேர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.

நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மதன். சுத்தமல்லி விலக்குபகுதியை சேர்ந்த சோலையப்பன் மகன் ஐயப்பன். நாராயணன் மகன் ஐயப்பன்.

நாராயணனின் அண்ணன் மகள் திருமணத்தை முன்னிட்டு இவர்கள் மூவரும் அப்பகுதியி்ல் உள்ள உறவினர்களுக்கு நேற்று அப்பகுதியில் திருமண அழைப்பிதழ் கொடுத்தனர்.

பின்னர் சுத்தமல்லி பிள்ளையார் கோவில் முன் மது அருந்தியபடி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆட்டோ மற்றும பைக்குகளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் மூவரையும் சராமரியாக வெட்டியது. இதில் இரு ஐயப்பன்களும் சம்பவ இடத்திலேயே தலை துண்டித்து கொல்லப்பட்டனர்.

வெட்டப்பட்டு தப்பி ஓடிய மதனையும் விடாமல் அக்கும்பல் விரட்டி சென்று தலையை துண்டித்து கொலை செய்தது. தகவல் அறிந்ததும் எஸ்பி ஆஸ்ரா கர்க் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தால் நெல்லை அருகேயுள்ள சுத்தமல்லி பாரதி் நகர், வஉசி நகர், முன்னீர்பள்ளம், ராமையன்பட்டி, மானூர், தாழையுத்து, சீவலபேரி, பாளை, நடுவங்குறிச்சி, கீழப்பாட்டம் ஆகிய பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது.

இதனால் இந்த பகுதிகளில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட போலீசாரும் நெல்லைக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குறிப்பிட்ட 2 பிரிவினர் அதிகம் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தெருக்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். முக்கிய பஸ் நிறுத்தங்கள், கடை வீதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட 3 பேரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள பாளை அரசு மருத்துவமனை பகுதிகளில் கொலை செய்யப்பட்டவர்களி்ன் உறவினர்கள் ஏராளமானோர் குவித்தனர். இதனால் அங்கு அதிரடி படை போலீசார் உள்பட பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராயல் கிங்:

கொலை செய்யப்பட்ட சுத்தமல்லி மதனை அவரது நண்பர்கள் உள்பட பலரும் ராயல் கிங் என்றே அழைப்பார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நியூராயல் சினிமா தியேட்டரில் கார்த்திக் நடித்த ஒரு படத்தை பார்த்தபோது 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் தியேட்டரி்ல் வைத்தே மதன் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்தான். அப்போது மதனுக்கு 18 வயதுதான். அதில் இருந்தே பலரும் மதனை ராயல் கிங் என்றே அழைத்து வந்தனர்.

ஏராளமான கொலைகளுக்கு மதன் கூலிப்படை தலைவனாக செயல்பட்டு வந்ததால் ஒருநாளும் அவன் வீட்டில் தங்க மாட்டான். கல்லூரில் உள்ள உறவினர் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என்று மாறி மாறி தங்குவான். கடந்த சில மாதங்களாக சுத்தமல்லியில் உள்ள வீட்டில் தங்கி இருந்து திருமணம் செய்வதற்கான ஏற்பாட்டை செய்து வந்தான். அதற்குள் எதிரிகள் தீர்த்து கட்டி விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+