மன்னார்குடி: வீடுகளுக்குள் புகுந்த லாரி-9 பேர் பலி
திருவாரூர்: மன்னார்குடி அருகே இன்று அதிகாலை வீடுகளுக்குள் லாரி புகுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த 5 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 9 பேர் பரிதாமாக பலியாயினர்.
திருச்சியில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு நேற்றிரவு லாரி சென்றது. லாரியை ஜெயபால் (29) என்பவர் ஓட்டிச் சென்றார்.
தஞ்சை- மன்னார்குடி சாலையில் கலவாய்க்கரை என்னுமிடத்தில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சென்ற போது டிரைவர் ஜெயபாலின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது.
சாலையின் இடதுபக்கம் இருந்த குடிசை வீடுகளுக்குள் லாரி புகுந்தது. இதில் சிவசாமி, நாடிமுத்து, நடராஜன் ஆகியோரின் வீடுகள் தரைமட்டமாயின.
இதில், சிவசாமியின் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி கனகவள்ளி (38), மகள் கனிமொழி (14), மகன் சந்தோஷ் (12), அவரது மாமியார் சிந்தாமணி (80), உறவினர்கள் கோவிந்தம்மாள் (58), நடராஜன் (55), மற்றும் சித்ரா (28), அட்சயா (4) ஆகியோர் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாமாக உயிரிழந்தனர்.
இதில் சிவசாமி மட்டும் அதிரிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சிவசாமி வீட்டில் புகுந்த லாரி அருகில் இருந்த நாடிமுத்து வீட்டுக்குள்ளும் புகுந்ததில் நாடிமுத்துவின் மனைவி மல்லிகா (40), மகள் அபிராமி (22), மகன்கள் சுதாகர் ( 20), விவேக் (17) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
மேலும் நிற்காமல் ஓடிய லாரி அதற்கு அடுத்திருந்த நடராஜன் என்பவரது வீட்டுக்குள்ளும் புகுந்ததில் நடராஜரின் மனைவி வசந்தா படுகாயமடைந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 2 பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை நடத்தியதில் லாரி டிரைவர் ஜெயபால் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டிச் சென்றதால் தான், இந்த கோர விபத்து நடந்திருப்பது தெரிய வந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications