ஜனவரி 31க்குப் பின் 3ம் கட்ட சலுகைகள்!

ஜனவரி 31ம் தேதிக்குப் பிறகு இந்த சலுகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். இந்த அறிவிப்பை மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் இன்று வெளியிட்டார்.
டெல்லியில் இன்று சிஐஐயின் கூட்டாண்மை மாநாடு 2009ல் பங்கேற்றுப் பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.
"நாட்டின் பெரிய பிரச்சினையாக பணவீக்கம் பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 5.2 சதவிகிதம் என்ற அளவுக்கு பணவீக்கம் குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை இந்த ஆண்டு 7.2 சதவிகிதம் என்ற நிலையில் நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இதற்காக மூன்றாவது கட்ட நிதிச் சலுகைகளை அளிக்க அரசு தயாராக உள்ளது. ஜனவரி 31ம் தேதி இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும்.
மத்திய அரசின் தொடர்ந்த இந்த சலுகை அறிவிப்பு காரணமாகத்தான் நம்மால் வெளிநாட்டு மூலதனத்தை இந்த பொருளாதார மந்த காலத்திலும் ஈர்க்க முடிந்துள்ளது என்றார் கமல்நாத்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த டிசம்பருடன் முடிந்த 3வது காலாண்டுதான் உலகில் மிகுந்த நெருக்கடியான காலமாக ப் பார்க்கப்பட்டது. அந்த கட்டத்தில் மட்டும் இந்திய பெற்றுள்ள நேரடி அந்நிய முதலீட்டின் அளவு 18.7 பிலிலியன் டாலர்கள் என்றார்.












Click it and Unblock the Notifications