பிரபாகரனை கண்டிப்பாக பிடிப்போம்-இலங்கை
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிருடனோ அல்லது பிணமாகவோ கண்டிப்பாக பிடிப்போம் என இலங்கை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கெஹலிய ரம்புகவெல்லா கூறியுள்ளார்.
பிரபாகரன் இலங்கையிலிருந்து தப்பியிருக்கலாம், முல்லைத் தீவில் அவர் இருப்பார் என உறுதியாக கூற முடியாது என அந்நாட்டு ராணுவத் தளபதி பொன்சேகா கூறியிருந்தார். இந் நிலையில் நேற்று பிரபாகரன் இங்குதான் தங்கியிருந்தார் என்று கூறி ஒரு பங்கரின் படத்தை வெளியிட்டது இலங்கை ராணுவம்.
இந் நிலையில், பிரபாகரனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்போம் என்று கூறியுள்ளார் ரம்புகெவல்லா. பிரபாகரன் இலங்கையில் இல்லை என பொன்சேகா கூறியுள்ள நிலையில் அதற்கு மாறாக ரம்புகவெல்லா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரபாகரன் இலங்கையில்தான் இருக்க வேண்டும். அவர் பங்கர் பங்கராக மாறிக் கொண்டிருக்கிறார்.
நிச்சயம் பிரபாகரனை உயிருடனோ அல்லது பிணமாகவோ நாங்கள் பிடித்து விடுவோம் என்கிறார் ரம்புகவெல்லா.
பிரபாகரன் குறித்து இலங்கைத் தரப்புக்கு இன்னும் தெளிவான தகவல் இல்லை என்பதையே இது காட்டுவதாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications