Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா இன்று பதவியேற்கிறார்

Subscribe to Oneindia Tamil

Obama
வாஷிங்டன்: அமெரிக்காவின் 44வது அதிபராக பாரக் ஒபாமா இன்று பதவியேற்கிறார். இதையொட்டி வாஷிங்டன் நகரில் மக்கள் குவிந்துள்ளனர். அமெரிக்காவே விழாக்கோலம் பூண்டுள்ளது.

கருப்பர் இனத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க வரலாற்றில் புதிய சரித்திரத்தை வடித்துள்ளார்.

அமெரிக்காவின் 44வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் பதவியேற்றுக் கொள்கிறார். அவருடன் துணை அதிபர் ஜோ பிடேன், அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்கின்றனர்.

பதவியேற்பு விழாவின் முக்கிய அம்சமாக கேபிடல் ஹில்லில் இருந்து வெள்ளை மாளிகை வரை கண்கவர் பாரம்பரிய அணிவகுப்பு நடைபெறும்.

பதவியேற்பு மற்றும் அணிவகுப்பைக் காண லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வருவார்கள். இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாஷிங்டன் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவின்போது வாஷிங்டனில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. போர் விமானங்களின் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வாகன நிறுத்தங்களிலும் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பாலங்கள் மூடப்படும். சுரங்கப் பாதைகளில் போலீஸாரும், உளவுப் பிரிவினரும், பாதுகாப்புப் படையினரும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பதவியேற்பு விழாவுக்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தீவிரவாதத் தாக்குதல் நடந்தால் அதை சமாளிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பதவியேற்பு விழா தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் வாஷிங்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க லிங்கன் நினைவிடத்தில் நேற்று முன்தினம் இரவு இசைக் கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர்.

பதவியேற்ற பின் 21ம் தேதி தேசிய பிரார்த்தனை சேவை என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 6 மாதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அவர்களில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் புரோகிதர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.

அவரது பெயர் டாக்டர் உமா மைசூர்கர். வட அமெரிக்க இந்து கோவில் சபையின் தலைவராக உமா உள்ளார். தேசிய பிரார்த்தனை நிகழ்ச்சியில், சிறப்பு வழிபாட்டை அவர் நடத்தவுள்ளார்.

அமெரிக்காவின் மத சுதந்திரம், சகிப்புத்தன்மையை நிரூபிக்கும் வகையில் இந்த பல் மத பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பதவியேற்பு விழாக் கமிட்டி தெரிவித்துள்ளது.

உமா மைசூர்கர், மகப்பேறு மருத்துவர் ஆவார். நியூயார்க்கில் உள்ள கணேசர் கோவிலை நிர்வகித்து வருகிறார். 1977ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி இந்த கோவில் நிறுவப்பட்டது. வட அமரிக்காவின் முதலாவது இந்து கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டனில் உள்ள நேஷனல் கதீட்ரலில் இந்த சேவை நடைபெறும்.

பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டு வழிபாடுகளையும், பிரார்த்தனைகளையும் மேற்கொள்வர்.

இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்குகிறது. ஏராளமான தொலைக்காட்சி நிறுவனங்கள் பதவியேற்பு விழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

இந்த நிலையில் ஒபாமா, அமெரிக்காவை மாற்றிக் காட்டுவார் என 80 சதவீத அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவரது பதவியேற்பு மகிழ்ச்சி தருவதாக 68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாக சி.என்.என். கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

ப்ரீத்தா பன்சாலுக்கு அரசு வக்கீல் பதவி:

இந் நிலையில் அமெரிக்க பட்ஜெட் மற்றும் நிர்வாக அலுவலக முதுநிலை வக்கீல் மற்றும் மூத்த கொள்கை ஆலோசகராக இந்திய அமெரிக்க வக்கீலான ப்ரீத்தா பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது நியூயார்க் நகரில் உள்ள ஸ்கேடன், ஆர்ப்ஸ், ஸ்டேல், மியாகர், பிளாம் எல்எல்பி ஆகிய நிறுவனங்களின் சட்ட ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளார் பன்சால்.

முன்னதாக இவரை ஒபாமா, அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கக் கூடும் என பேச்சு அடிபட்டது.

2004-05ம் ஆண்டில், அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையத்தின் தலைவராக பணியாற்றியவர் பன்சால்.

அந்தப் பதவியில் இருந்தபோது, ஈராக், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சவூதி அரேபியா, வியட்நாம், சீனா, ரஷ்யா, ஹாங்காங், தெற்கு ஆசிய நாடுகளுக்கு அமெரிக்க தூதுக் குழுவின் சார்பாக பயணம் செய்துள்ளார்.

1999ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை நியூயார்க் மாகாண தலைமை அரசு வக்கீலாக பணியாற்றியுள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரான பன்சால், உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் பால் ஸ்டீவன்ஸிடம் கிளர்க் ஆகவும் பணியாற்றியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+