அலுவலகம் தாக்குதல்: சிபிசிஐடி விசாரணை-சுவாமி
சென்னை: மதுரையில் உள்ள ஜனதாக் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்ரமணியம் சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி மதுரை மாவட்ட கோர்ட்டு முன்பு தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் கூட்டமைப்பு' ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
விடுதலைப்புலிகளை எதிர்ப்பவர்களையும், மத்திய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுமட்டுமல்லாமல், தமுக்கம் மைதானம் அருகேயுள்ள தந்தி அலுவலகத்தை நோக்கி தமிழ் வக்கீல்கள் கூட்டமைப்பு புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்றார்கள்.
ஊர்வலத்தில் சென்றவர்கள் எனக்கு எதிராக கோஷமிட்டார்கள். கம்பு, செருப்பு போன்றவற்றுடன் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தவில்லை.
பின்னர் அவர்கள், அப்பகுதியில் உள்ள ஜனதா கட்சி அலுவலகத்தை தாக்கினார்கள். இதில் மாவட்ட ஜனதா கட்சி தலைவர் காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது. இதுவரை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆகவே, இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டுமென்று உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாட்ஷா, பிப்ரவரி 11ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். மேலும், இதுதொடர்பாக பதிலளிக்கும்படி டிஜிபி, சிபிசிஐடி ஐஜி, தல்லாகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications