தமிழகத்தில் 1 கோடி பேருக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்!
சென்னை: ஒரு கோடி ஏழை குடும்பத்தினர் ஒரு லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற உதவும் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
சட்டசபையில் ஆளுநர் பர்னாலாவின் உரையில் தமிழக அரசு இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது.
பர்னாலா தனது உரையில், தமிழக அரசு மருத்துவத்துறையில் சீரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் பயனாக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும், மகப்பேறுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதில் நாம் நாட்டுக்கே முன்னோடியாக இருக்கிறோம்.
எனினும், புற்று நோய், இதய நோய், சிறுநீரக கோளாறு, மூளை மற்றும் முதுகுத்தண்டு பாதிப்பு, உயிருக்கு ஆபத்தான விபத்துகள் போன்ற பல கடுமையான நோய்களுக்கு ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது என்பதை நாம் அறிவோம்.
இந்த நோய்களில் இருந்து தங்கள் உயிரை காக்க அவர்களால் செலவு செய்ய இயலாது என்பதையும் அரசு நன்கு உணர்ந்து உள்ளது.
இதனால் ஏழை மக்கள் அனைவரும் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் இத்தகைய கடும் நோய்களுக்கு இலவசமாக உயர் சிகிச்சை பெறும் வகையில், உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்வரின் காப்பீட்டுத்திட்டம்' என்ற புதிய சுகாதார இன்சூரன்ஸ் திட்டம் இந்த ஆண்டில் இருந்து செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெற்றிட மருத்துவ காப்பீடு செய்யப்படும். இதற்கான காப்பீட்டுத்தொகையை அரசே செலுத்தும்.
இத்திட்டத்தால் தமிழகத்தில் உள்ள ஒரு கோடி ஏழை குடும்பத்தினர் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications