கோவை அருகே குட்டிகளுடன் சிறுத்தை தஞ்சம்
கோவை: கோவை அருகே மஞ்சூரில் சிறுத்தை தஞ்சமடைந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மஞ்சூர்- கோவை சாலையை சீரமைக்கும் பணியில் சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
மட்டக்கண்டி அருகே உள்ள புதரை வெட்டி அப்புறப்படுத்தி கொண்டிருந்தபோது உள்ளிருந்து உறுமல் சப்தம் கேட்டுள்ளது. அச்சமடைந்த சாலைப் பணியாளர்கள் அஞ்சி ஓடினர்.
இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த குந்தா வனச் சரகர் ஜெகநாதன் புதரில் ஆய்வு செய்தபோது பிறந்து இரண்டே மாதங்களான நிலையில் இருந்த மூன்று குட்டிகளுடன் சிறுத்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜெகநாதன் கூறுகையில், குட்டிகள் பிறந்து இரண்டே மாதங்கள் ஆகியிருப்பதால் அவைகளால் நீண்ட தூரம் நடமாட முடியாது.
சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கலாம் என்றால் குட்டிகள் கூண்டில் ஏறாது. தாயைப் பிரிந்தால் குட்டிகள் இறந்துவிடும். சில தினங்களில் குட்டிகள் நடமாட தயாரானதும் அவை வேறிடத்துக்கு சென்று விடும். அதுவரையில் பொது மக்கள் யாரும் அப்பகுதியில் நடமாட வேண்டாம் என்று கேட்டுக் கெள்கிறோம்.
பொது மக்கள் நடமாடாமல் பார்த்துக் கொள்ளவும், சிறுத்தையை கண்காணிக்கவும் வேட்டை தடுப்பு காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications