ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து வாஷிங்டனில் நாளை பேரணி
வாஷிங்டன்: ஈழத்தில் நடந்து வரும் இனப்படுகொலைக்கு இந்தியா ஆதரவு தரக் கூடாது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நாளை மாலை மாபெரும் பேரணி நடத்தப்படவுள்ளது.
இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பின் சார்பில் இந்தப் பேரணி நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு, வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இலங்கையில் தமிழர்கள் நடத்தி வரும் சுதந்திரப் போராட்டத்தை, மகாத்மா காந்தியடிகளின் வழியில் இந்திய அரசு அணுக வேண்டும், ஆதரிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.
இலங்கை அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலைக்கு இந்தியா துணை போகக் கூடாது என்றும் வலியுறுத்தப்படவுள்ளது.
அமெரிக்கா முழுவதிலும் வசிக்கும் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் இதில் பங்கேற்கவுள்ளனர்.
பேரணியில் கலந்து கொள்ளவுள்ளவர்கள் மகாத்மா காந்தியடிகள் போல உடை தரித்து, காலித் தட்டுடன் உண்ணாவிரதமும் மேற்கொள்ளவுள்ளனர். தமிழர்களுக்கு மருந்து, உணவுப் பொருட்கள் கூட கிடைக்காமல் இலங்கை அரசு தடுத்து வருவதை சித்தரிக்கும் வகையில் இந்த உண்ணா நிலைப் போராட்டம்.
ஈழத் தமிழர்கள் இந்தியாவின் நண்பர்கள், தொப்புள் கொடி உறவுடையவர்கள். அவர்களைப் படுகொலை செய்து வரும் சம்பவங்களை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கைக்கு எவ்வித உதவியையும் இந்தியா தரக் கூடாது. தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்கவுள்ளவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.
இலங்கையில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்துமாறு இந்தியா, இலங்கையை கட்டாயப்படுத்த வேண்டும். இதன் மூலம் அப்பிராந்தியத்தில் அமைதி திரும்பும். சுமூகப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்குமாறு இலங்கைக்கு இந்தியா அறிவுரை கூற வேண்டும் எனவும் வலியுறுத்தப்படவுள்ளது.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications