ராமலிங்க ராஜு பெயரில் 3400 ஏக்கர் நிலங்கள்
ஹைதராபாத்: சத்யம் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பெயரிலிருந்த பெரும்பான்மைப் பங்குகளை தன் தம்பி சூரியநாராயண ராஜு மற்றும் தாயார் அப்பாலா நர்சம்மா ஆகியோருக்கு மாற்றியுள்ளதை ஆந்திர மாநில சிஐடி போலீசார் உறுதிப் படுத்தியுள்ளனர்.
சத்யம் ராமலி்ங்க ராஜு செய்துள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடிகளில் பல மட்டங்களில் விசாரணை நடந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் புதுப்புது உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
நேற்றைய விசாரணையின்போது, தனது பெயரிலிருந்த பெரும்பான்மையான பங்குகளை தன் தம்பி மற்றும் அம்மா பெயரில் மாற்றியதை ஒப்புக் கொண்டார் ராஜு.
மேலும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஐதராபாத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் 3400 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளதையும் ஒப்புக் கொண்டார் ராஜு.
அகுலா ராஜையா என்பவர்தான் தரகராக இருந்து இந்த நிலங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். பெரும்பாலும் ராஜுவின் பெயரிலேயே அனைத்து நிலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்காகவே தன்னையும் தன் குடும்ப உறுப்பினர்களையும் கொண்ட எஸ்ஆர்எஸ்ஆர் ஹோல்டிங்ஸ், எஸ்ஆர்எஸ்ஆர் அட்வைஸரிஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் உருவாக்கியுள்ள ராஜூ, இந்த நிறுவனங்கள் மூலமாகத்தான் மொத்த நிலங்களையும் வாங்கியுள்ளார்.
ஆந்திர அரசு ஏலம் விடுத்த பெரும்பாலான நிலங்களையும் ராஜுதான் வாங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications