காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார் அஸாருதீன்: மொய்லி
டெல்லி: முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகம்மது அஸாருதீன் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பமாக உள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் அஸாருதீன் சமீபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, வீரப்ப மொய்லி மற்றும் சீனிவாஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் காங்கிரஸில் சேரவிருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.
இதுகுறித்து வீரப்ப மொய்லி கூறுகையில், அஸாருதீன் காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் எங்கு போட்டியிட்டால் சரியாக இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும் என்றார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவை அஸாருதீன் சந்தித்தபோது அந்தக் கட்சியில் அவர் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சேரவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸில் சேர அஸாருதீன் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஒருவேளை காங்கிரஸில் அவர் சேர்ந்தால், ஹைதராபாத்தில் அவர் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
கங்குலிக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் அஸாருதீன். 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2000மாவது ஆண்டு சூதாட்டத்தில் சிக்கி நிரந்தரமாக கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications