லோக்சபா தேர்தலில் போட்டியி மு.க.அழகிரி, கனிமொழி தயார்
ராமநாதபுரம்: லோக் சபா தேர்தலி்ல் போட்டியிட கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால் நாங்கள் தயார் என தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியும், திமுக ராஜ்யசபா உறுப்பினர் கவிஞர் கனிமொழியும் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் நடந்த திமுக நிகழ்ச்சி ஒன்றில், முதல்வர் கருணாநிதியின் மகனும் தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளருமான மு.க. அழகிரி கலந்து கொண்டார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிட தயாராக உள்ளேன். எனினும் இந்த விஷயத்தில் கட்சித் தலைமை தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்.
திமுக தலைமை உத்தரவிட்டால் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நான் போட்டியிட தயாராக உள்ளேன்.
கட்சி நிறுத்தும் தொகுதியில் போட்டியிட்டு என்னால் வெற்றி பெற முடியும் என்றார்.
அண்மையில் மதுரை புறநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் அழகிரி போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
இதேபோல நெல்லை மாவட்டம், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் சங்க இலக்கிய பயிலரங்கத்தில் கலந்து கொள்வதற்காக கனிமொழி எம்பி நேற்று பாபநாசம் வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனக்கு பிடித்த மாவட்டங்களில் நெல்லை மாவட்டமும் ஒன்று. எல்லா அம்சமும் நிறைந்த மாவட்டம் இது.
கட்சி முடிவெடுத்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தாயாராக இருக்கின்றேன். மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்வேன்.
இலங்கை பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலமே தீர்வு காண முடியும். கட்சியில் எந்த பொறுப்போ, பதவியோ நான் விரும்பவில்லை. ஆனால் பொறுப்புடன் நடந்து கொள்வேன். மந்திரி பதவி இல்லாததாது குறித்து எனக்கு கவலையில்லை.
அண்ணன் அழகிரியை தென்மண்டல பொறுப்பாளராக நியமித்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இடதுசாரிகள் தற்போது கூட்டணி சேர்ந்துள்ள அதிமுகவினருக்கும், இவர்களுக்கும் கொள்கையளவில் வேறுபாடு உள்ளது.
இலங்கை பிரச்சனை ஆகியவற்றில் இந்த இருவரின் நிலைப்பாடும் வெவ்வேறாக உள்ளது. எனவே இந்த கூட்டணி அதிக நாள் நீடிக்காது.
ராகுல் காந்தியை பிரதமராக ஏற்போம்
ராகுல் காந்தியை பிரதமராக ஆக்கும் திட்டம் குறித்து இதுவரை காங்கிரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. மக்கள் அவரை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நாங்களும் ஏற்றுக் கொள்வோம் என்றார் அவர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு












Click it and Unblock the Notifications