திருமங்கலம்: 19 மண்டல அலுவலர்களுக்கு நோட்டீஸ்
மதுரை: திருமங்கலம் இடைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது வாக்களிக்கத் தேவையான ஆவணங்களின் விவரங்களை உரிய முறையில் பரிசோதிக்கத் தவறிய வட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ள 19 மண்டல அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவின் போது சுமார் 10 வாக்குச் சாவடிகளுக்கு வட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ள ஓர் அதிகாரி வீதம் மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும், மத்திய அரசு ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர்.
தேர்தல் நடைபெற்ற பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் ஓட்டுநர் உரிமம், வங்கி பாஸ் புக், ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
அவ்வாறு வாக்களிக்கும் போது அந்த ஆவணங்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கபடவில்லை.
குறிப்பாக ஓட்டுநர் உரிமம் என்றால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமம் எண், வங்கி பாஸ் புக் என்றால் அதற்குரிய எண் ஆகியவற்றை வாக்குச் சாவடியில் உள்ள ஊழியர்கள் குறித்து வைத்து, வாக்குப்பதிவு முடிந்த பின்பு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த பணிகள் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் முறையாக மேற் கொள்ளப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் வாக்குப் பதிவின் போது பணியாற்றிய 19 மண்டல அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பத்து தினங்களுக்குள் உரிய பதில் அளிக்குமாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications